ஆஸ்கார் வென்ற முதல் கறுப்பின நடிகர் Sidney Poitier காலமானார்

ஆஸ்கார் வென்ற முதல் கறுப்பின நடிகர் Sidney Poitier காலமானார்

ஆஸ்கார் வென்ற முதல் கறுப்பின நடிகர் Sidney Poitier காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

08 Jan, 2022 | 4:15 pm

Colombo (News 1st) ஆஸ்கார் வென்ற முதல் கறுப்பின ஹொலிவுட் நடிகர் Sidney Poitier தனது 94 ஆவது வயதில் காலமானார்.

கறுப்பினத்தை சார்ந்த இவர் 1950 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வென்றவர்.

Sidney Poitier அமெரிக்கா மற்றும் பஹாமஸ் என இருநாட்டு குடியுரிமையை பெற்றவர்.

1958 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கான போட்டியில் The Defiant Ones திரைப்படத்திற்காக Sidney Poitier பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் Lilies of the Field படத்தில் நடித்தமைக்காக ஆஸ்கார் விருதை வென்றதன் மூலம் ஆஸ்கார் விருது வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அவருக்கு US Presidential Medal of Freedom விருது வழங்கி கொளரவிக்கப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்