பசில் ராஜபக்ஸவின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம்

பசில் ராஜபக்ஸவின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம்

பசில் ராஜபக்ஸவின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2022 | 7:41 pm

Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.

மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பிலான வழக்கு இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்திருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் இந்திய பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்தியாவில் COVID தொற்று அதிகரித்திருப்பதால், தற்போது அங்கு செல்ல முடியாது என பசில் ராஜபக்ஸ பதில் வழங்கினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்