சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளது

சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளது

சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2022 | 3:40 pm

Colombo (News 1st) கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளது.

Qingdao Seawin Biotech Group Co., Ltd நிறுவனத்திற்கு இந்த தொகை இன்று செலுத்தப்படவுள்ளதாக இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

சீன உர நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை இடைநிறுத்தி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 48 மணித்தியாலங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

குறித்த சீன நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த தடை நீக்கப்பட்டிருந்தது.

கொழும்பு கமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் ஆகியன இதற்கான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்திற்கு கடந்த 3 ஆம் திகதி அறிவித்திருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்