எண்ணெய் குதங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு மனு தாக்கல்

எண்ணெய் குதங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு மனு தாக்கல்

எண்ணெய் குதங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2022 | 3:11 pm

Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்ட உடனபடிக்கையுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு இன்று (07) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித்த தேரர் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர், ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சர், பாதுகாப்பு செயலாளர், எரிசக்தி அமைச்சர், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட 47 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கை கொழும்பில் நேற்று (06) கைச்சாத்திடப்பட்டது.

உடன்படிக்கையின் படி இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 99 குதங்களில் 85 குதங்கள் இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் கட்டமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள இணக்கப்பாடு இந்தியாவிற்கு அதனை முழுமையாக வழங்கும் முயற்சியின் ஒரு கட்டமா என தொழிற்சங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்