தொடர்மாடி குடியிருப்பு தீயில் சிக்கி 12 பேர் பலி

Philadelphia தொடர்மாடி குடியிருப்பில் தீ; சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

by Staff Writer 06-01-2022 | 8:22 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் Philadelphia நகரிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து இடம்பெற்ற போது தொடர்மாடி குடியிருப்பில் 26 பேர் இருந்துள்ளதாக நம்பப்படுகின்றது. Philadelphia நகரிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் இரண்டாவது தளத்தில் நேற்று (05) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாரிய பிரயத்தனத்துடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து, விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.