எரிவாயு கொழும்பு 7-இலும் வடக்கிலும் ஏன் வெடிக்கவில்லை: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகம்

எரிவாயு கொழும்பு 7-இலும் வடக்கிலும் ஏன் வெடிக்கவில்லை: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2022 | 9:07 pm

Colombo (News 1st) எரிவாயு விபத்துகள் தொடர்பில் தமக்கு பாரிய சந்தேகம் நிலவுவதாக இன்று (06) குருநாகலில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.

இது தொடர்பில் இரகசியமாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும் – 7 பகுதியிலோ, வடக்கிலோ, குருநாகல் நகரிலோ கண்டியிலோ எரிவாயு வெடிப்பதில்லை. எனவே, இது குறித்து ஆராய வேண்டும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

கொழும்பு 7 மற்றும் வடக்கில் வெடிக்காத எரிவாயு ஏன் சில இடங்களில் மாத்திரம் வெடிக்கின்றது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்