இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்

இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்

இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2022 | 9:21 pm

Colombo (News 1st) இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தாமும் ஆவணத்தில் கையொப்பமிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் வௌியில் இருந்து இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நாளைய தினம் (07) ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்