பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் 13,000-ஐ கடந்தது

கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் 13,000-ஐ கடந்தது

by Staff Writer 05-01-2022 | 8:38 PM
Colombo (News 1st) டொலர் நெருக்கடி, எரிவாயு, பால் மா, உர பிரச்சினைக்கு மத்தியில் கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் இன்று மீண்டும் அதிகரித்தது. இன்று கொடுக்கல் வாங்கல் முடிவில் பங்குகளின் விலைச்சுட்டி 13,000-ஐ கடந்துள்ளமை விசேட அம்சமாகும். இது நேற்றைய நாளிலும் பார்க்க 2.1 வீத அதிகரிப்பாக அமைந்துள்ளது. இன்று (05) கொழும்பு பங்குச்சந்தையின் மொத்த பிறழ்வு 15.56 பில்லியனை கடந்தது.