by Bella Dalima 05-01-2022 | 5:06 PM
Colombo (News 1st) கசக்கஸ்தான் அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளதுடன், அதனை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
கசக்கஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வலப்பெற்றதையடுத்து, அமைச்சரவை தமது இராஜினாமா கடிதத்தை கையளித்தது.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
கசக்கஸ்தானின் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
இந்நிலையில், கசக்கஸ்தான் அமைச்சரவையின் இராஜிநாமாவை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பொறுப்பேற்று இராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.