பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2022 | 10:48 am

Colombo (News 1st) எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை கருத்திற்கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு சொந்தமான நிறுவனங்களை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும்போது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமாக அமையும் என அமைச்சர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்