பரந்த கூட்டணி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது: விமல் வீரவன்ச தெரிவிப்பு

பரந்த கூட்டணி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது: விமல் வீரவன்ச தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2022 | 7:57 pm

Colombo (News 1st) பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலபேயில் தெரிவித்தார்.

மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜகத் குமார மற்றும் பிரதீப் உதுகொட ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு நிறைவு பெற்றதன் பின்னர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வினவுவதற்கு ஊடகவியலாளர்கள் முயன்றனர்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த விமல் வீரவன்ச, முடிந்தால் எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இதுவென குறிப்பிட்டார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது என சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்