கொலையில் முடிந்த TikTok தகராறு: பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

கொலையில் முடிந்த TikTok தகராறு: பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

கொலையில் முடிந்த TikTok தகராறு: பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2022 | 4:46 pm

Colombo (News 1st) TikTok தொடர்பில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் 17 வயதான இளைஞர் கடந்த 3 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.

தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

TikTok காணொளி தொடர்பில் இளைஞர்கள் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வலுப்பெற்றதால், இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்