கிண்ணியா படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவரால் நிதி உதவி

கிண்ணியா படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவரால் நிதி உதவி

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2022 | 1:04 pm

Colombo (News 1st) கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவரால் நேற்றைய தினம் (04)  நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (04) பிற்பகல் குறிஞ்சாக்கேணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து இடம்பெற்ற இடத்தையும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.

பின்னர் படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்