இன்று (05) முதல் புதிய பஸ் கட்டணங்கள்

இன்று (05) முதல் புதிய பஸ் கட்டணங்கள்

by Staff Writer 05-01-2022 | 8:52 AM
Colombo (News 1st) திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்று (05) முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. புதிய கட்டணங்களுக்கு அமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 14 ரூபாவிருந்து 17 ரூபா வரை அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். பஸ் கட்டணங்கள் யாவும் கடந்த 29 ஆம் திகதி, 17.44 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க சொகுசு மற்றும் அரை சொகுசு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என நிலான் மிரண்டா கூறினார். அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்களை பஸ்ஸில் காட்சிப்படுத்துமாறு அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் 1955 எனும் இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் கூறினார். இதேவேளை, பஸ்களில் உள்ள பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் சுமார் ஒரு மாத காலத்திற்கு பயணச்சீட்டினை வழங்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி...  ⭕ புதிய பஸ் கட்டணங்கள்