யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று

யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று

யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா; இதுவரை மூவருக்கு தொற்று

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2022 | 2:54 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு மலேரியா நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதான ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஜமுனாநந்தன் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவிலிருந்து கடந்த வாரம் குறித்த நபர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (03) அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மூன்று பேருக்கு இதுவரை மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்