மூன்று மொழிகளில் வௌியாகும் வலிமை

மூன்று மொழிகளில் வௌியாகும் வலிமை

மூன்று மொழிகளில் வௌியாகும் வலிமை

எழுத்தாளர் Bella Dalima

04 Jan, 2022 | 3:45 pm

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படம் 3 மொழிகளில் வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘வலிமை’யின் Trailer வெளியாகி இரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதிக சண்டைக் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தணிக்கைத் துறையினர் UA சான்றிதழ் வழங்கினர்.

இந்நிலையில், தற்போது ’வலிமை’ திரைப்படம் தமிழ். தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஜனவரி 13 ஆம் திகதி வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

H.விநோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்