பொரளையில் தங்காபரண கொள்ளை: தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது

பொரளையில் தங்காபரண கொள்ளை: தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது

பொரளையில் தங்காபரண கொள்ளை: தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2022 | 5:38 pm

Colombo (News 1st) பொரளையிலுள்ள தங்காபரண விற்பனை நிலையமொன்றில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்களை கொள்ளையிட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நவகமுவ பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் இன்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேகநபர்கள், தங்காபரண விற்பனை நிலையத்திற்குள் புகுந்து, மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தங்காபரணங்களை திருடிச்சென்றனர்.

கொள்ளைச் சம்பவத்தின் போது உளவுபார்த்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்