நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவுக்கான மகாராணியின் கோல்

by Staff Writer 03-01-2022 | 9:48 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவுக்கான மகாராணியின் கோல் இன்று (03) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா இங்கிலாந்தின் பங்கிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ள நிலையில் மகாராணியின் கோல் 72 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அந்த கோல் இன்று (03) இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோல், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியின் பதங்கம் வென்ற வீரர்களான சிந்தன கீதால் விதானகே மற்றும் ஹங்சனி கோமஸினால் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. மகாராணியின் கோளை தாங்கிய தூதுக் குழுவினரை வரவேற்பதற்காக பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில், தமது திறமைகளை வௌிக்காட்டிய வீரர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்தனர். பின்னர் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா மத்திய நிலையத்திற்கு கோல் கொண்டுவரப்பட்டது. பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவுக்கான மகாராணியின் கோல், நாளை (04)  கண்டிக்கும் நாளை மறுதினம் (05) ஹட்டனுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.