வீட்டில் பரவிய தீயால் பெண் உயிரிழப்பு

வீட்டில் பரவிய தீயால் பெண் உயிரிழப்பு

வீட்டில் பரவிய தீயால் பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2022 | 3:32 pm

Colombo (News 1st) எலபாத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தீ பரவியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

69 வயதான ஒருவரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மாத்திரம் வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்தினபுரி நகர சபைக்கான தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையோ அல்லது மின்சார வசதிகளோ இல்லையென்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்