போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 02-01-2022 | 8:21 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (03) முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நாளை (03) முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமைபோன்று சேவைக்கு அழைக்கப்படுவதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.