மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது – சிவசக்தி ஆனந்தன்

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது – சிவசக்தி ஆனந்தன்

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது – சிவசக்தி ஆனந்தன்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2022 | 10:22 pm

Colombo (News 1st) மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளும் ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தை விரைவுபடுத்த வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தை அனுப்புவதன் ஊடாக இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என அதில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆட்சியிலுள்ள தரப்பினர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை கையிலெடுத்துள்ள நிலையில், 13 ஆவது அரசியலமைப்புச் சட்டம் அகற்றப்படும் அபாயமுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழர்களின் அபிலாஷைகளை 13 ஆவது அரசியலமைப்பு முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும் முதலில் இந்த இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர் தாமதங்களை தவிர்த்து மிக விரைவாக கூட்டு ஆவணத்தை பாரதப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்