காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்பு

காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்பு

காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2022 | 5:06 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காரைநகர் கடலில் நீராடச் சென்று காணாமற்போயிருந்த மாணவனொருவர் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நண்பர்களுடன் காரைநகர் கசூரினா கடலில் நீராடச் சென்ற போது இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்களால் ஒருவர் மீட்கப்பட்டார்.

எனினும் மற்றையவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டார்.

கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலை அடுத்து சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் காரைநகர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காரைநகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்