சீமெந்து விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்து விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்து விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2022 | 9:55 pm

Colombo (News 1st) சீமெந்து ஒரு மூடையின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இதுவரை 1,275 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்து 1,375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஒரு மூடையின் விலை 1,475 ரூபாவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், உள்ளூர் சீமெந்திற்கான விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னரும், இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரித்தே காணப்படும்.

இதனிடையே, சந்தையில் தற்போது சீமெந்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சீமெந்து தட்டுப்பாட்டினால் சீமெந்துக் கல் உற்பத்தி உள்ளிட்ட சீமெந்துடன் தொடர்புடைய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்