பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கிற்கான வரி குறைப்பு

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி 30 ரூபாவால் குறைப்பு

by Staff Writer 31-12-2021 | 7:57 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி 30 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இன்று (31) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது. நுகர்வோருக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.