40 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி

தீவனத்திற்காக 40 இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி

by Staff Writer 31-12-2021 | 5:15 PM
Colombo (News 1st) கால்நடை தீவனத்திற்காக 40 இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் அதிக விலை செலுத்தி கால்நடைகளுக்கான தீவனங்களை பெறும் போது ஏற்படும் விலை அதிகரிப்பை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால், முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படவுள்ள 40 இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை குறைந்த விலையில் அவர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் விலையேற்றத்தை குறைக்க முடியுமெனவும் அவர் கூறினார். இதற்கமைய, முட்டை ஒன்றின் விலையை 02 ரூபாவாலும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 50 ரூபாவாலும் குறைப்பதற்கு வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் மேலும் தெரிவித்தார்.