குமாரி எல்ல ஆற்றில் குளிக்கச்சென்று காணாமற்போன 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

குமாரி எல்ல ஆற்றில் குளிக்கச்சென்று காணாமற்போன 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

குமாரி எல்ல ஆற்றில் குளிக்கச்சென்று காணாமற்போன 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Dec, 2021 | 2:52 pm

Colombo (News 1st) ஹங்வெல்ல – துன்மோதர குமாரி எல்ல ஆற்றில் குளிக்கச்சென்று காணாமற்போன 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

16 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகளும் 29 வயதான யுவதி ஒருவரும் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர்.

மூவரில் ஒருவர் வத்தளை – ஹெந்தல பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமற்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்