அரச ஊழியர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்

எழுத்தாளர் Bella Dalima

31 Dec, 2021 | 3:49 pm

Colombo (News 1st) எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் அனைவரும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டுமென தெரிவித்து அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக, கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று (30) வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், சுகாதார நடைமுறைகள் தொடர்பில் இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த நடைமுறைகள் அவ்வாறே பின்பற்றப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் அரச சேவைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்