by Staff Writer 30-12-2021 | 6:34 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் இலங்கைக்கு 69,941 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
COVID பெருந்தொற்று காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் 393 சுற்றுலா பயணிகளே இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்தியா, ரஷ்யா, லண்டன், ஜெர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், மாலைத்தீவுகள், உக்ரைன் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இம்மாதம் வருகை தந்துள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,74, 930 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 5,07,704 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
டிசம்பர் காலப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து 7,951 சுற்றுலா பயணிகளும் லண்டனிலிருந்து 6,819 சுற்றுலா பயணிகளும் ஜெர்மனியில் இருந்து 4,131 சுற்றுலா பயணிகளும் பிரான்ஸிலிருந்து 2,313 சுற்றுலா பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
Air France, Russia Aeroflot மற்றும் கசகஸ்தான் Air Astana ஆகிய விமான சேவைகள் இந்த வருடத்தில் நேரடியாக இலங்கைக்கு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியிருந்தன.