கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 500 அரிசி கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 500 அரிசி கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 500 அரிசி கொள்கலன்கள்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2021 | 11:34 am

Colombo (News 1st) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்கள் உள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சரிசி போன்றவை அவற்றில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அவற்றில் ஒருசில கொள்கலன்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்