ஒமிக்ரோன், டெல்டா திரிபுகள் சேர்ந்து சுனாமி பேரலையை உருவாக்கும் – WHO

ஒமிக்ரோன், டெல்டா திரிபுகள் சேர்ந்து சுனாமி பேரலையை உருவாக்கும் – WHO

ஒமிக்ரோன், டெல்டா திரிபுகள் சேர்ந்து சுனாமி பேரலையை உருவாக்கும் – WHO

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2021 | 11:42 am

Colombo (News 1st) டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகள் ஒன்றிணைந்து ஆபத்தான வகையில், COVID – 19 சுனாமி பேரலையை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம் வௌியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom Ghebreyesus இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் ஐரோப்பாவில் நாளாந்த நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரான்ஸில் 208,000 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க், போர்த்துக்கல், பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

போலந்து நாட்டில் நேற்று 794 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்