அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் CEO - பிரதமர் இடையே சந்திப்பு

by Staff Writer 30-12-2021 | 12:38 PM
Colombo (News 1st) அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல் ரஹ்மான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நேற்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிவரும் நெருக்கமான ஒத்துழைப்பை பிரதமர் இதன்போது நினைவுகூர்ந்துள்ளார். இதேவேளை, சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேற்று (29) சந்தித்துள்ளனர். இதன்போது சவுதி நிதியத்திலிருந்து இலங்கையின் அபிவிருத்திக்காக பெறக்கூடிய ஆதரவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.