Asian Powerlifting Championships போட்டிகளில் இலங்கைக்கு 14 தங்கப் பதக்கங்கள் 

by Staff Writer 29-12-2021 | 8:21 PM
  Colombo (News 1st) இலங்கைக்கு இன்று இரண்டு சர்வதேச வெற்றிகள் கிட்டியுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான Asian Powerlifting Championships போட்டிகளில் இலங்கை வீர வீராங்கனைகள் பெற்றுக்கொண்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான Asian Powerlifting Championships போட்டிகளில் இலங்கை சார்பில் 6 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் கனிஷ்ட மகளிர் பிரிவில் போட்டியிட்ட ஷெனுகி திஷால்யா 47 கிலோகிராம் எடைப்பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார். இதனிடையே, ஆடவருக்கான 120 கிலோகிராம் பகிரங்க எடைப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் ரன்சிலு ஜயதிலக்க ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். ஆடவருக்கான பகிரங்க 59 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட சுரேன் பெரேரா 03 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கினார். தொடருக்கான சிரேஷ்ட பிரிவில் போட்டியிட்ட மொதிலால் ஜயதிலக்க 4 தங்கப் பதக்கங்களையும் சந்தன திலகரட்ன ஒரு தங்கப் பதக்கத்தையும் 03 வௌ்ளிப் பதக்கங்களையும் ஹிரான் பெர்னாண்டோ ஒரு தங்கப் பதக்கத்தையும் வெற்றிகொண்டனர். 2021 ஆம் ஆண்டுக்கான Asian Powerlifting Championships போட்டிகள் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.