பஸ் கட்டண உயர்வு இன்று (29) அறிவிக்கப்படும் - NTC

பஸ் கட்டண உயர்வு இன்று (29) அறிவிக்கப்படும் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

by Staff Writer 29-12-2021 | 8:59 AM
Colombo (News 1st) பஸ் கட்டணங்களின் திருத்தம் தொடர்பில் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ் கட்டண அதிகரிப்பில் அனைத்து விடயங்களும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர், கொமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டார். எரிபொருள் விலை அதிகரிப்பு, வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு, டொலர் பெறுமதி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நியாயமான முறையிலேயே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.