சூடானில் தங்க சுரங்கம் இடிந்து 38 பேர் பலி

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து 38 பேர் பலி

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து 38 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2021 | 4:25 pm

Colombo (News 1st) சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானின் தலைநகரான  Khartoum-இன் தெற்கில் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபுஜா எனும் பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான தங்க சுரங்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டு செயற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், மூடப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது, குறித்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 38 பேரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்