A5 வீதியின் பிபிலையில் இருந்து செங்கலடி வரையான பகுதி திறந்து வைப்பு

by Staff Writer 28-12-2021 | 2:59 PM
Colombo (News 1st) A5 வீதியின் பிபிலை தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீட்டர் வீதி இன்று (28) முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிகழ்வில் கலந்துகொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். வீதி புனரமைப்பிற்கு நிதி அனுசரணை வழங்கிய சவுதி அரேபியாவை சேர்ந்த பிரதிநிதிகளும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர், செங்கலடி பிரதேச செயலாளர், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.