பெண்ணை கொன்று உரப்பையில் சுற்றி பாலத்தின் கீழ் வீசிய இளைஞர் கைது

by Staff Writer 28-12-2021 | 5:52 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பெண்ணை கூரான ஆயுதத்தால் குத்தி உரப்பையில் சுற்றி அக்கராயன் ஆற்றிலுள்ள முதலை பாலத்தின் கீழ் இளைஞர் போட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். இளைஞரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய, இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிளிநொச்சி தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.