ஜனாதிபதியின் முயற்சியால் இயங்கும் பலசரக்கு சந்தைப்படுத்தல் சபைகள்

by Staff Writer 28-12-2021 | 8:19 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பிரகாரம், உணவிற்கு பயன்படுத்தப்படும் பலசரக்கு தூள் மற்றும் அது சார்ந்த சந்தைப்படுத்தல் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றன. பலசரக்கு சந்தைப்படுத்தல் சபை 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் குறித்த காலப்பகுதியில் ஆவணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட செயலற்ற நிறுவனமாக இருந்தது. கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்திற்காக மீமுரே பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த சபையை மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதற்கமைய, மெதிவல மசாலா சந்தைப்படுத்தல் சபை நிறுவப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து 10 மசாலா சந்தைப்படுத்தல் சபைகள் நிறுவப்பட்டுள்ளன.