புது டெல்லியில் இரவு நேர ஊரடங்கு; புது வருட கொண்டாட்டங்களுக்கு தடை

புது டெல்லியில் இரவு நேர ஊரடங்கு; புது வருட கொண்டாட்டங்களுக்கு தடை

புது டெல்லியில் இரவு நேர ஊரடங்கு; புது வருட கொண்டாட்டங்களுக்கு தடை

எழுத்தாளர் Bella Dalima

28 Dec, 2021 | 5:02 pm

Colombo (News 1st) இந்திய தலைநகர் புது டெல்லியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் 200-ஐ தாண்டியுள்ளதால், இரவு நேர ஊரடங்கு நேற்று (27) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இரவு நேர ஊரடங்கால் டெல்லி சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

நத்தார் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது புது வருட கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நேரத்தில் சாலைகளில் அனைத்து வாகனங்களும் சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன

இதனால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று (27) மட்டும் 290 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, 30 ஆம் திகதியிலிருந்து கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், புது வருட கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்