English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Dec, 2021 | 8:46 pm
Colombo (News 1st) முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.
அண்மையில் இரத்மலானைக்கு வந்து, திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்ற ஜெட் விமானம் தொடர்பில் இதன்போது அவர் கருத்து தெரிவித்தார்.
T7 GSG எனப்படும் குறித்த விமானம் இலங்கைக்கு வருகை தந்தமைக்கான உண்மையான காரணம் என்னவென அவர் வினவினார்.
இந்த விமானம் JetSetGo Aviation Services Private Limited என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரபல செல்வந்தர்களின் விமான பயணங்களுக்காக பிரத்தியேகமாக விமானங்களை வழங்கும் நிறுவனமாகும்.
JetSetGo Aviation Services நிறுவனத்திடமிருந்தே விமானம் பெறப்பட்டதாக புபுது ஜாகொட குறிப்பிட்டார்.
T7 என்ற குறியீடு தொடர்பில் ஆராய்ந்தபோது, இது San Marino-வில் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே அந்த குறியீடு கிடைக்கும் என்பதை அறிய முடிந்தது. San Marino என்பது மிகவும் சிறிய நாடுகளில் ஒன்றாகும். அந்த நாடு கறுப்பு பணத்தை தூய்தாக்குவதற்கு பெயர்போன இடமாகும். ஆகவே இந்த விமானம் கறுப்பு பணத்தை தூய்தாக்கும் திட்டத்தின் ஒரு அங்கமா என்ற சந்தேகமும் மறுபுறம் எழுகின்றது. யோஷித ராஜபக்ஸ தந்தையின் நண்பர் பணம் வழங்கினார் என கூறுவதைப் போன்று அல்லாது, ஏற்கனவே கூறிய டேசி பாட்டியின் மாணிக்கக்கல் பொதி கதை போன்று அல்லாது இது தொடர்பில் விரிவான தௌிவுபடுத்தல் தேவைப்படுகிறது
என புபுது ஜாகொட வலியுறுத்தினார்.
14 Jul, 2022 | 03:46 PM
24 May, 2022 | 08:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS