நாளை (29) முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

நாளை (29) முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

நாளை (29) முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2021 | 9:58 am

Colombo (News 1st) பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாளை (29) முதல் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்