கிண்ணியா நகரசபை பட்ஜெட் மீதான இரண்டாம் வாசிப்பு தோல்வி

கிண்ணியா நகரசபை பட்ஜெட் மீதான இரண்டாம் வாசிப்பு தோல்வி

கிண்ணியா நகரசபை பட்ஜெட் மீதான இரண்டாம் வாசிப்பு தோல்வி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2021 | 7:38 pm

Colombo (News 1st) கிண்ணியா நகரசபை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 3 மேலதிக வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது.

இரண்டாவது வாசிப்பிற்கான அமர்வு இன்று நகரசபை தலைவர் S.H.M. நளீம் தலைமையில் இடம்பெற்றது.

13 பேர் கொண்ட கிண்ணியா நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 5 பேரும் எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக ஒருவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்