இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான பரிமாற்ற காலத்தை 3 மாதங்களுக்கு நீடித்தது பங்களாதேஷ்

இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான பரிமாற்ற காலத்தை 3 மாதங்களுக்கு நீடித்தது பங்களாதேஷ்

இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான பரிமாற்ற காலத்தை 3 மாதங்களுக்கு நீடித்தது பங்களாதேஷ்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2021 | 7:55 pm

Colombo (News 1st) இலங்கைக்கு வழங்கியுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பரிமாற்ற காலத்தை இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைய மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மூன்று தவணைகளில் பங்களாதேஷில் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகை 3 மாதங்களில் காலாவதியான பின்னர் செலுத்த வேண்டியுள்ளது.

அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு பங்களாதேஷ் மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக டாக்கா நகரில் இருந்து செயற்படும் New Age இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த பண பரிமாற்ற வசதிக்காக 2.5 வீத வட்டியையும் செலுத்த வேண்டும் என்பதுடன், மூன்று மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதால் மேலும் அதேபோன்றதொரு தொகையினை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்