by Staff Writer 27-12-2021 | 7:24 PM
Colombo (News 1st) சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் (Xi Jinping), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இன்று (27) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹோங் இந்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்ததாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.