by Staff Writer 27-12-2021 | 4:43 PM
Colombo (News 1st) இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காக 12 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
கலப்பு உரம் மற்றும் யூரியாவை இறக்குமதி செய்வதற்கே குறித்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உரத்தை நெற்செய்கை மற்றும் ஊடுபயிர்களான காய்கறிகள் மற்றும் பழ செய்கைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனடிப்படையில், எதிர்வரும் 2 மாதங்களில் சந்தைகளில் தட்டுப்பாடின்றி இரசாயன உரத்தை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 மெட்ரின் தொன், NPK ரக உரம் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அனுமதியின் பிரகாரம் 1,500 மெட்ரிக் தொன் யூரியா விரைவில் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
எவ்வாறாயினும், அரச மானிய விலைத் திட்டத்தின் கீழ் இந்த உரம் விநியோகிக்கப்பட மாட்டாது என சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டுள்ளார்.