ஆப்கான் பெண்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பு

ஆப்கான் பெண்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பு

ஆப்கான் பெண்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2021 | 5:40 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயணங்களை மேற்கொள்வதில் புதிய கட்டுப்பாடுகளை தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஆப்கானிஸ்தானில் 72 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டுமெனவும் ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாதெனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்களை கேட்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இதனையடுத்து, அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்