அரசடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரிடம் வாக்குமூலம் பதிவு

அரசடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரிடம் வாக்குமூலம் பதிவு

அரசடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2021 | 6:36 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – அரசடி பகுதியில் கடந்த 20 ஆம் திகதி வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (27) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஷ்வான் முன்னிலையில் இன்று (27) வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதன்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தனது மனைவியின் கொலைக்கு நீதி வேண்டும் என அவர் நீதவான் முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – அரசடி பகுதியில் கடந்த 20 ஆம் திகதி 49 வயதான பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டதுடன், அவரின் தங்காபரணங்களும் திருடப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்