பேராயர் Desmond Tutu நித்திய இளைப்பாறினார்

நிறவெறிக்கு எதிராக போராடிய பேராயர் Desmond Tutu நித்திய இளைப்பாறினார்

by Staff Writer 26-12-2021 | 6:08 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் இன்று (26) நித்திய இளைப்பாறினார். வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியமையால், 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்ற போது "வானவில் தேசம்" என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபல்யப்படுத்தியவராக பேராயர் டுட்டு காணப்படுகின்றார். பேராயரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பேராயர் டுட்டு, உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவரென இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது வலியுறுத்தல் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.