பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை துன்புறுத்திய கந்தர OIC கைது

by Staff Writer 25-12-2021 | 7:53 PM
Colombo (News 1st) கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை துன்புறுத்துவதற்கு முயற்சித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆயுதம் தாங்கிய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) கடமையில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய பெண் பொலிஸ் அதிகாரியை பொலிஸ் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயற்சித்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாத்தறை பிரதம நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அடுத்த வழக்கு தவணையின்போது அனைத்து சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.