by Staff Writer 25-12-2021 | 4:46 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இதற்காக விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் போது, சுகாதார ஒழுங்குவிதிகளை உரியவாறு பின்பற்றுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டார்.