by Staff Writer 24-12-2021 | 6:29 AM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு LPL T20 கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை Jaffna Kings அணி தனதாக்கியது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று (23) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் Galle Gladiators அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து Jaffna Kings அணி வெற்றியை தனதாக்கியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த Jaffna Kings அணி 03 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ 02 சிக்ஸர்கள், 08 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றார்.
Rahmanullah Gurbaz 35 ஓட்டங்களை பெற்றார். Tom Kohler-Cadmore 41 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டங்களை பெற்றார்.
அதற்கமைய, 202 ஓட்டங்களை வெற்றியலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் தனுஷ்க குணத்திலக்க 07 பௌண்டரிகள், 03 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்றார்.
குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஸ 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினர்.
தொடரின் ஆட்ட நாயகனாக 312 ஓட்டங்களை பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ தெரிவானார்.